(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, July 11, 2015

குரூப்-1 தேர்வு அறிவிப்பு!!

No comments :
74 உயர் பதவிகளுக்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பு (வெள்ளிக்கிழமை) வெளியானது. தேர்வு எழுத ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி கடைசி நாள்.

குரூப்-1 தேர்வு:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் உயர் பதவிகளுக்கான குரூப்-1 தேர்வை நடத்தி வருகிறது. இந்த வருடத்திற்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பு (வெள்ளிக்கிழமை) வெளியானது.

துணை கலெக்டர் பணியிடங்கள்-19, போலீஸ் துணை சூப்பிரண்டு பணியிடங்கள் -26, உதவி வணிக வரி அலுவலர்கள் பணியிடங்கள் -21, மாவட்ட பதிவாளர்கள் பணியிடங்கள்- 8 ஆகிய 74 பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது.இன்று அறிவிப்பு வெளியானதும். தேர்வு எழுத விரும்பும் பட்டதாரிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தற்போது 3 அல்லது 4 ஆண்டு பட்டப்படிப்புக்கான இறுதி செமஸ்டர் தேர்வு எழுதிவிட்டு சான்றிதழுக்காக காத்திருப்போரும் இந்த தேர்வை எழுதலாம்.

கடைசி நாள் இந்த தேர்வுக்கு பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி கடைசிநாள்.
இந்த தேர்வு முதல் நிலை தேர்வு, மெயின்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய 3 நிலைகளை கொண்டவை. ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் மறுதேர்வுக்கு செல்லமுடியும்.

துணைகலெக்டர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் அவர்கள் சில வருடங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்கள். அதுபோல துணை சூப்பிரண்டு பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் அவர்கள் சில ஆண்டுகள் கழித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, டி.ஐ.ஜி. ஆகலாம்.
முதல் நிலை (பிரிமிலினரி) தேர்வு நவம்பர் மாதம் 8-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்வு தமிழ்நாடு முழுவதும் 33 மையங்களில் நடக்கிறது.


No comments :

Post a Comment