(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, July 4, 2015

ராமநாதபுரத்தில் குரூப் 2 நேர்முகத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி!!

No comments :தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி, போகஸ் அகாதெமி சார்பில் இம்மாதம் 8 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் வலம்புரி மகாலில் செயல்பட்டு வரும் போகஸ் அகாதெமி, வரும் 8 ஆம் தேதி முதல் தொடர்ந்து 7 நாள்களுக்கு இப்பயிற்சி வகுப்பை நடத்தவுள்ளது.

சுமார் 1064 பணியிடங்களுக்கான இந்த குரூப்-2 நேர்முகத் தேர்வினை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி நடத்தவுள்ளது.

இந்த வகுப்பில், அரசு உயர் அலுவலர்கள், துறை வல்லுநர்கள் கலந்துகொண்டு பயிற்சி அளிக்கின்றனர். இதில், நேர்முகத் தேர்வுக்கு தயாராகும் விதம் குறித்தும், மாதிரி நேர்காணலும் நடத்தப்படும்.

நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள், தங்களது சுயவிவரங்களுடன் வலம்புரி மகாலில் உள்ள அலுவலகத்துக்கு நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 94427-22537 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு தகவல் தெரிந்து கொள்ளலாம் என இதன் ஒருங்கிணைப்பாளர் மு. சிபிகுமரன் தெரிவித்துள்ளார்.No comments :

Post a Comment