(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, July 7, 2015

துபாயில் விபத்தில் உயிரிழந்த தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனைவி மனு!!

No comments :
துபையில் விபத்தில் உயிரிழந்த தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அவரது மனைவி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை திங்கள்கிழமை மக்கள் குறைதீர் கூட்டத்தில் சந்தித்து மனு அளித்துள்ளார்.

ராமநாதபுரம் அருகே மேலக்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட சாலைக்குடியிருப்பு கிராமத்தில் வசித்து வருபவர் ராமலெட்சுமி (27). இவர் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் கோபால் துபையில் கட்டடத் தொழில் செய்து வந்தார்.


கடந்த வாரம் அங்கு அவர் பணியாற்றும் நிறுவனத்தின் காரில் சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டதாக துபையில் உள்ள நண்பர்கள் சிலர் தகவல் அளித்தனர். சடலத்தை துபை மருத்துவமனையில் வைத்திருப்பதாகவும் அப்போது கூறப்பட்டது. எனவே எனது கணவரின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் எனது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு எனக்கு ஏதாவது அரசுப்பணி வழங்க வேண்டும். அத்துடன் அரசு நிவாரண உதவியும் வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். ராமலெட்சுமியுடன் அவரது குடும்பத்தினரும் வந்து இருந்தனர்.

செய்தி: தினமணி


No comments :

Post a Comment