(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, July 16, 2015

தங்கச்சிமடம் தேவாலயத் திருவிழா!!

No comments :
ராமேசுவரத்தில் அமைந்துள்ள பழமையான புனித சந்தியாகப்பர் தேவாலயத் திருவிழா, வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

 ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பகுதியிலுள்ளது புனித சந்தியாகப்பர் தேவாலயம்.
இதன் 473 ஆவது ஆண்டு திருவிழா, வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு சிறப்பு திருப்பலி பூஜைகளுடன் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.

 தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறவுள்ள இத்திருவிழாவில், தினமும் திருப்பலி பூஜைகளும், நற்கருணை, ஆராதனைகளும், பிரார்த்தனைக் கூட்டங்களும் நடைபெற உள்ளன.


 விழாவின் 9 ஆம் நாள் திருவிழாவான வரும் 24 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மேல் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் சந்தியாகப்பர், தெரசம்மாள், செபஸ்தியார் சிலைகள் வைக்கப்பட்டு, தேவாலய வளாகத்தைச் சுற்றி தேர்ப்பவனி நடைபெறவுள்ளது. 

இந்த திருவிழாவில் ஆண்டுதோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வர் என்பதால், குடிநீர் வசதி உள்ளிட்ட பக்தர்களுக்கான பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு வருவதாக, விழாக் குழுவைச் சேர்ந்த ராஜஜெகன் தெரிவித்தார்.

செய்தி: தினமணி


No comments :

Post a Comment