(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, July 13, 2015

ராமநாதபுரத்தில் நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார்!!

No comments :
சிறுபான்மையினருக்கு உடலாகவும், உயிராகவும் இருப்பேன் என்று ராமநாதபுரத்தில் நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசினார்.

ராமநாதபுரத்தில் தே.மு.தி.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா வரவேற்றுப் பேசினார். மாநில நிர்வாகிகள் சந்திரகுமார், பார்த்தசாரதி, முஜிபுர் ரகுமான், பிஸ்மில்லா, ஜாகிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

விழாவில், விஜயகாந்த் பேசியதாவது:- 

ரமலான் நோன்பு கடைபிடித்து வரும் அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நான் சிறுபான்மையினருக்கு என்றும் உடலாகவும், உயிராகவும் இருப்பேன். இங்கு நோன்பு திறக்க வந்திருப்பதால் மட்டும் இதை சொல்லவில்லை. நான் அதிகமாக கோபப்படுவதாக சொல்கிறார்கள். படங்களில் நடித்து அதுபோன்று பழகி விட்டது. அதேநேரத்தில் தவறு செய்தால் மட்டுமே நான் கோபப்படுபவன். நான் யாருக்கும் பயப்படமாட்டேன். ஜெயலலிதாவிற்கு கூட நான் பயப்படவில்லை. ஆனால், அவருக்குதான் குடை பிடிக்கவில்லை என்றால் கோபம் வரும். ஆனால், நான் அப்படி கிடையாது. நான் எதுக்காக கோபப்படுகிறேன் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 
எதற்காக இங்கு நோன்பு திறக்க முடிவு செய்தேன் என்றால், எல்லா புகழும் இறைவனுக்கே என்று நினைப்பதை போல அந்த இறைவன்தான் இங்கு என்னை நோன்பு திறக்க பணித்துள்ளார். இறைவன்தான் எனது மாநில நிர்வாகிகள் மூலமாக இந்த பகுதியில் நோன்பு திறக்க வைத்துள்ளார். அதேபோல, என்னை முதன் முதலில் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்த எனது நண்பர் மசூத் பிறந்த ஊரான இந்த மாவட்டத்தில் நோன்பு திறக்க வந்துள்ளது அவர் மீதான நன்றி விசுவாசத்துக்காகத் தான்.

எனது மற்றொரு நண்பர் இபுராகிம் ராவுத்தர் இன்று உடல்நலம் சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். என் நண்பன் மீண்டும் எழுந்து பேச வேண்டும் அவர் உடல்நலம் பெற வேண்டும். இதற்கு அனைவரும் ஒட்டுமொத்தமாக இந்த ரமலான் நோன்பில் கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும். இந்த பிரார்த்தனை அவர் காதில் கேட்டு எழுந்து பேச வேண்டும். 

இதற்காக அனைவரும் பிரார்த்தனை செய்ய தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அவன் வேறு கட்சிக்கு சென்றுவிட்டான் என்று சிலர் கூறுகின்றனர். அவர் எந்த கட்சிக்கு சென்றாலும் என் நண்பன். அவரை எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன். 

இந்த ரமலான் மாதத்தில் நோன்பிருந்து கொண்டாடுவது தீமைகளை பொசுக்கி நல்லதை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகத் தான். அதேபோல, என் தொண்டர்கள் அனைவரும் தீமைகளை பொசுக்கி நல்லதை நிலைநாட்ட வேண்டும். எனக்கு தீயவர்களை கண்டால் பிடிக்காது. ஏன் நான் இப்தார் நோன்பு திறக்க வந்துள்ளேன். 

எனக்கு சிறுவயது முதலே இஸ்லாமியர்கள் தான் உடனிருந்துள்ளனர். எனது மூத்த மகனின் உண்மையான பெயர் சவுக்கத்அலிகான். பாஸ்போர்ட் எடுப்பது போன்ற பணிகளின்போது சிக்கல் வரக்கூடாது என்பதற்காகத்தான் சண்முகபாண்டியன் என்று பெயரை மாற்றி வைத்தேன். எனக்கு சாதி, மத பேதம் எதுவும் கிடையாது. எம்மதமும் சம்மதம் என்பதே எனது கேரக்டர். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். எந்த அரசியல்வாதிக்கும் அஞ்ச மாட்டேன். நான் பயப்படுவது என் தாய் தந்தைக்கு, எனது தொண்டர்களுக்கு, எனது குழந்தைகளுக்கு மட்டும்தான். 
செய்தி: தினத்தந்தி

No comments :

Post a Comment