(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, July 14, 2015

சத்திரக்குடி கோவில் கும்பாபிஷேக விழா!!

No comments :
சத்திரக்குடி சேதுபதி விவேகானந்தபுரத்தில் உள்ள இருளாயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த 11-ந்தேதி விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம் ஆகியவற்றுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.அதனைத் தொடர்ந்து 12-ந்தேதி காலை 6 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 6 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜை, துர்க்கா ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 8 மணிக்கு கோமாதா , லட்சுமி பூஜையை தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கடம் புறப்பாடாகி அரண்மனை சிவன் கோவில் மனோகர குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.


விழாவில் சுற்று வட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். 

செய்தி: தினத்தந்தி

No comments :

Post a Comment