(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, August 3, 2015

ராமநாதபுரத்தில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி!!

No comments :
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. 2-வது நாள் போட்டியை ராமநாதபுரம் ஜே.எஸ்.கே. குழுமத்தின் தலைவர் லோகிதாசன் தொடங்கி வைத்தார்.

முன்னதாக விளையாட்டு வீரர்களை மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் பிரபாகரன், துணை தலைவர் அரு.சுப்பிரமணியன் மற்றும் சங்க நிர்வாகிகள் வாழ்த்தி ஊக்கப்படுத்தினர்.அப்போது மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் பிரபாகரன் கூறியதாவது:- ராமநாதபுரத்தில் உள்ள இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களை ஊக்கப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் ராமநாதபுரத்தில் அடிக்கடி மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் வீரர்களுக்கு தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

இதில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தேர்வு செய்யப்படுவார்கள். 

செய்தி: தினத்தந்தி

No comments :

Post a Comment