(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, August 24, 2015

கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட 4 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது!!

No comments :
கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட 4 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கீழக்கரையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, இங்கு கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற, பாம்பனை சேர்ந்த ராபர்ட் (32), யாசர்  அராபத் (32), ராமேஸ்வரத்தை சேர்ந்த முனீஸ் என்ற முருகேசன் (39),  வத்தலக்குண்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சிவா (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.52 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


இவர்கள் 4 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு ராமநாதபுரம் எஸ்பி மயில்வாகனன், கலெக்டருக்கு பரிந்துரைத்தார். கலெக்டர் நந்தகுமார், கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட 4 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.


இதையடுத்து கீழக்கரை போலீசார் ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த 4 பேரையும் கைது செய்து, மதுரை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.

No comments :

Post a Comment