(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, October 5, 2015

துபாய் டிக்கெட் ரூ.4,999/- மட்டுமே, ஸ்பைஸ் ஜெட் அறிவிப்பு!!

No comments :
நாட்டின் முன்னணி மலிவு விலை பயணிகள் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ்ஜெட்அமிர்தசரஸ் மற்றும் கோழிக்கோடு பகுதிகளில் இருந்து துபாய்ச் செல்லும் பயணிகளுக்குக் குறுகிய கால அடிப்படையில் 4,999 ரூபாய் என்ற சலுகை கட்டணத்தை அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் அமிர்தசரஸ்-துபாய் மற்றும் கோழிக்கோடு-துபாய் ஆகிய புதிய வழித்தடங்களின் அறிமுகத்தைக் கொண்டாடும் வகையிலும்புதிய பயணிகளைக் கவரும் வகையிலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இத்தகையைச் சலுகையை அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை முதல் இச்சலுகையில் விமான டிக்கெடுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்ஆனால் விமானப் பயணம் வருகிற நவம்பர் 15ஆம் தேதி முதல் துவங்கப்படுகிறது.
இப்புதிய வழித்தடங்களின் அறிமுகத்திற்குப் பின் ஸ்பைஸ்ஜெட், டெல்லி, மும்பை, அகமதாபாத், புனே, கொச்சி, மதுரை, அமிர்தசரஸ் மற்றும் கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் இருந்து நேரடியாகத் துபாய்க்கு விமானத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளது. இதன்பின் இப்பட்டியலில் கொல்கத்தா, சென்னை, ஹதெரபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு இச்சேவையை விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

இப்பயணத்திற்கு அனைத்து வகையான வரி மற்றும் கட்டணங்களுடன் ஸ்பைஸ்ஜெட் 4,999 ரூபாய் மட்டுமே வசூல் செய்கிறது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்போதைய நிலையில் துபாய் உட்பட 6 வெளிநாடுகளுக்கு விமானச் சேவையை அளித்து வருகிறது. இதில் துபாய், பாங்காங், கொழும்பு, காபூல், மாலத்தீவு. மேலும் காத்மாண்டு-விற்கு இந்நிறுவன சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. முடங்கப்பட்ட இச்சேவையும் கூடிய விரைவில் செயல்படுத்த ஸ்பைஸ்ஜெட் திட்டமிட்டுள்ளது.

செய்தி: ஒண் இண்டியா

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment