(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, October 5, 2015

பரமக்குடி ரயில் நிலையத்தில் பயன்பாடு இல்லாமல் ஆட்டோமேடிக் டிக்கெட் வென்டிங் மெஷின், நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!

No comments :
பரமக்குடி ரயில் நிலையத்தில் பயன்பாடு இல்லாமல் ஆட்டோமேடிக் டிக்கெட் வென்டிங்  மெஷின் உள்ளதால் பயணிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். பரமக்குடியை சுற்றிலும் அதிக கிராமங்கள் உள்ளன. ரயில் கட்டணம்பஸ் கட்டணத்தை விட குறைவாக இருப்பதால்மதுரை-ராமேஸ்வரம்திருச்சி-ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில்களில் செல்கின்றனர். இதற்காக ஏராளமான பயணிகள் தினந்தோறும் ரயில் நிலையம் வருகின்றனர். ரயில் நிலையத்தில் ஏற்கனவே பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் தற்போது கூட்டமான நேரங்களில் தானியங்கி முறையில் இயங்கும் ஆட்டோமேடிக் டிக்கெட் வென்டரிங் மெஷினும் பயனில்லாமல் வெறும் காட்சி பொருளாக பிளாட்பாரத்தில் உள்ளது.  இந்த இயந்திரத்தை இயக்க ஏடிஎம் கார்டு போல ஸ்மார்ட்கார்டு வேண்டும்.  அதை தனியாக ரயில்வேயில்  விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும்.  அதன் பின்பு தேவைக்கேற்ப அதில் பணத்தை செலுத்தி அந்த கார்டை நாம் பயன்படுத்தி கொள்ளலாம். ரயிலில் நாம் செல்லும் இடத்தை மானிட்டரில் தேர்வு செய்தால் தனியாக டிக்கெட் வந்து விடும்.  

இந்த இயந்திரத்தை பயன்படுத்த தெரியாதவர்களுக்கு விளக்கம் அளித்து டிக்கெட் எடுத்து கொடுப்பதற்காக ராமநாதபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில்நிலையங்களில் ரயில்வே பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.  பரமக்குடியில் இதுவரை அதுபோன்று யாரும் பணியில் அமர்த்தப்படவில்லை. இந்த இயந்திரம் குறித்த விழிப்புணர்வும் யாருக்கும் கிடையாது.  இதனால் கூட்ட நேரங்களிலும் பயணிகள் வழக்கம்போல் டிக்கெட்டை எடுக்க வரிசையிலேயே நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. ரயில்வே அதிகாரிகள் வரும் காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க இந்த இயந்திரத்தின் பயனை பயணிகளிடம் தெரிவித்து அதை இயக்க பணியாளரை அமர்த்தினால் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என்று பயணிகள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். 

பயணி சகுபர்சாதிக் கூறுகையில், “முக்கிய ரயில் நிலையங்களில் விரைவாக டிக்கெட் எடுக்க இந்த இயந்திரம் பயன்படுகிறது.  சிலமுறை இயக்க பழகிவிட்டால் ஏடிஎம் இயந்திரம் போல எளிதாக பயன்படுத்தலாம்.  அதற்கு அதிகாரிகள் விரைவில் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த இயந்திரம் பற்றி தெரியாதவர்களுக்கு இதுபற்றி முதலில் தெரிவிக்க வேண்டும்.  இதனால் பயணிகள் கூட்ட நேரங்களில் எளிதாக டிக்கெட் எடுத்து செல்லாம்என்றார்.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment