(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, October 10, 2015

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொழிற்கடன் பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொழிற்கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மற்றும் புது டெல்லியில் உள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் நிதி உதவியுடன், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் இனத்தவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் கடன்கள் வழங்கப்பட்டுவருகிறது. நடப்பு நிதி ஆண்டில் (2015–16) ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் இனத்தவர்கள் தொழில்புரிய கடன் வழங்கும் பொருட்டு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.


இந்த திட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் தொழில் புரிவதற்காக, தனிநபர் கடன், சிறு வணிக கடன் மற்றும் மகளிர் குழு கடன் ஆகியவகைகளில் ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி பின்தங்கியுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நீர்பாசன வசதியை ஏற்படுத்தும் வகையில் ஆழ்துளை கிணறு அமைக்க அரசு மானியத்துடன் கூடிய கடன் திட்டமும் ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.



எனவே இந்த வகுப்பை சேர்ந்தவர்கள், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படும், தனிநபர் கடன், சிறு வணிகக்கடன் மற்றும் மகளிர் குழு கடன், ஆழ்குழாய் அமைப்பதற்கான மானியத்துடன் கூடிய கடன் ஆகியவற்றினை பெற உரிய விண்ணப்பத்தினை ராமநாதபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் பெற்று தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். 

மேலும் விவரங்களை 99944 41257 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் நந்தகுமார் தெரிவித்தார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment