(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, October 7, 2015

பரமக்குடி- தூத்துகுடி புதிய ரயில்வே பாதை பச்சைகொடி காட்டியது ரயில்வே நிர்வாகம், மக்கள் மகிழ்ச்சி!!

No comments :


தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, பரமக்குடியிலிருந்து துாத்துக்குடிக்கு முதுகுளத்துார், சாயல்குடி வழியாக புதிய ரயில்பாதை அமைக்க தென்னக ரயில்வே பச்சைக்கொடி காட்டியுள்ளது.
ராமநாதபுராம் மாவட்டத்தில் முதுகுளத்துார், கமுதி, கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் ரயில் போக்குவரத்து இல்லை. பரமக்குடியில் இருந்து துாத்துக்குடிக்கு முதுகுளத்துார், கடலாடி, சாயல்குடி வழியாக, புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என, 1970 ல் தென்னக ரயில்வே அறிவித்தது. அதன்பின் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.


இப்பகுதிகளில் இருந்து பனை வெல்லம், மரக்கரி, உப்பு, நிலக்கடலை போன்றவை வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. ரயில் போக்குவரத்து இல்லாததால் சரக்கு வாகனங்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி அனுப்புகின்றனர். இதனால் ரயில் பாதை கேட்டு அப்பகுதி மக்கள், வர்த்தகர்கள் தொடர்ந்து போராடி வந்தனர். இதையடுத்து மாநில அரசு
தென்னக ரயில்வேக்கு கடிதம் அனுப்பியது.

இதை ஏற்று, பரமக்குடியில் இருந்து துாத்துக்குடிக்கு ரயில் பாதை அமைக்க பரிசீலனை செய்து வருவதாக மாநில அரசுக்கு ரயில்வே நிர்வாகம் பதில் அனுப்பிஉள்ளது.மாநில வர்த்தக சங்க துணை தலைவர் கருப்பசாமி கூறியதாவது:முகுதுளத்துார், கமுதி, கடலாடி பகுதிகளில் ரயில் சேவை இல்லாததால் தொழில், வர்த்தகம் பாதிக்கப்படுகிறது.

தற்போது கடலாடி அருகே ரூ.24 ஆயிரம் கோடியில் 4 ஆயிரம் மெகாவாட் அனல்மின் நிலையம், கமுதி அருகே ரூ.4,536 கோடியில் 636 மெகாட் 'சோலார்' மின் நிலையம் அமைய உள்ளன. இதனால் ரயில்சேவை அவசியம் தேவை. புதிய ரயில் பாதை அமைந்தால் துாத்துக்குடி, சென்னைக்கு இடையேயான துாரம் குறையும். 45 ஆண்டுகளுக்கு பின் ரயில்பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் முன்வந்ததை வரவேற்கிறோம், என்றார்.

செய்தி: தினசரிகள்


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment