வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!

Saturday, October 17, 2015

ராமநாதபுரம் மாவட்டத்தில் சமையலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதிகளில் சமையலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கும் பள்ளி, கல்லூரி மாணவமாணவிகள் விடுதிகளில் காலியாக உள்ள 17 ஆண் மற்றும் 10 பெண் சமையலர் பணியிடங்கள் நேர்காணல் மூலம் இனச்சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்காக தகுதி உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன்றன.

விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுதபடிக்க தெரிந்திருக்க வேண்டும். சைவ மற்றும் அசைவ உணவு சமைக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 01.07.2015 அன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 18 முதல் 35 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இதர பிரிவினர் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் ராமநாதபுரம் மாவட்ட எல்கைக்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

இந்த தகுதியுடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் முழுநேர சமையல் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயர், தகப்பனார் பெயர், பாலினம், பிறந்த தேதி, அஞ்சல் முகவரி, கல்வி தகுதி, சாதி, முன்னுரிமை விவரம் ஏதேனும் இருப்பின் குறிப்பிடவும். விதவை, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுதிறனாளிகள், கலப்பு திருமணம் புரிந்தோர் வேலைவாய்ப்பு பதிவு விவரம் இருப்பின் குடும்ப அட்டை எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்–1 ஆகிய விவரங்கள் மற்றும் ஆவணங்களுக்கு சான்று, நகல்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 30–ந்தேதி பிற்பகல் 5 மணிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.


இந்த காலக்கெடுவுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. கூர்ந்தாய்வுக்கு பின் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும், அதன் விவரம் தனியே தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தெரிவித்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment