(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, December 12, 2015

ராமநாதபுரத்தில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!!

No comments :
ராமநாதபுரத்தில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலர் மு.சந்திரன் வெள்ளிக்கிழமை கூறியது:

நகரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாலைகளிலும், பள்ளமான பகுதிகளிலும் மழை நீர் தேங்கி நிற்கும் இடங்களைக் கண்டறிந்து நகராட்சி கழிவு நீர் ஏற்றும் டேங்கர் லாரிகளின் மூலமாக அப்புறப்படுத்தி வருகிறோம். கழிவுநீரை தேங்க விடாமல் தொடர்ந்து வாறுகால்கள் மூலமாகவும் அகற்றி வருகிறோம்.


நகர் முழுவதும் கொசு மருந்துப் புகையடிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. நகரில் பொது சுகாதாரத்துக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக நகரில் சுற்றித் திரிந்த பன்றிகளை பிடித்து வருகிறோம். இதுவரையில் 40-க்கும் மேற்பட்ட பன்றிகள், பிடிக்கப்பட்டு மாவட்டத்துக்கு வெளியே உள்ள காட்டுப் பகுதிகளில்  விடப்பட்டுள்ளன.


சென்னை பாலவாக்கம் பகுதிக்கு ராமநாதபுரம் நகராட்சிப் பணியாளர்கள் 45 பேர் குப்பைகளை அகற்றுவதற்காக 4 லாரிகளுடன் சென்றுள்ளனர். அவர்கள் பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு உள்ளிட்ட கிருமிநாசினிகளுடன் சென்று துப்புரவுப் பணியை செய்து வருகின்றனர் என்றார்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment