(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, January 30, 2016

வாக்காளர்களை சேர்க்கவும், நீக்கவும் நாளையும், பிப்ரவரி 6 ஆம் தேதியும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது

No comments :
தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களை சேர்க்கவும், நீக்கவும் நாளையும், பிப்ரவரி 6 ஆம் தேதியும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், "ஜனவரி 1 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2016ன் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அந்த வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளவர்கள் தங்கள் பெயர்களைச் சேர்த்துக்கொள்ள மற்றும் புதிதாக பெயர் சேர்க்கவும், நீக்கவும், திருத்தவும், இடம் மாற்றம் செய்யவும் விண்ணப்பிக்கலாம். அதற்கு ஏதுவாக இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி நாளை மற்றும் பிப்ரவரி 6 ஆம் தேதி ஆகிய வார இறுதி நாட்களில் இரண்டு சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடத்தப்பட உள்ளன. இந்த சிறப்பு முகாம்களில் தொடர்புடைய பாகத்தின் வாக்காளர் பட்டியல்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவரும் உரிய ஆவணங்களுடன் தொடர்புடைய வாக்குச்சாவடிகளுக்குச் சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.வாக்காளர் பட்டியல்களை பிழையின்றி தயாரிப்பதற்கு ஏதுவாக ஏற்கனவே தெரிவித்த தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளத்தின் மூலமாக இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கு முன்னுரிமை தருமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுவரை 3 லட்சத்து 58 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்கி இருக்கிறோம். போலி வாக்காளர்கள் இல்லாத பட்டியலை வெளியிட உள்ளோம். அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். கடந்த தேர்தலில் 75 ஆயிரம் மின்னணு வாக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்போது 11 ஆயிரத்து 800 மின்னணு வாக்கு எந்திரங்கள் வந்து உள்ளன. பெல் நிறுவன பொறியாளர்கள் அந்த எந்திரங்களை இன்று முதல் சேலத்தில் சரிபார்க்க உள்ளனர். ஏற்கனவே வந்துள்ள மின்னணு எந்திரங்கள் போக பீகாரில் இருந்து 50 ஆயிரம் மின்னணு வாக்கு எந்திரங்கள் வர உள்ளன. அனைத்து மின்னணு வாக்கு எந்திரங்களும் பிப்ரவரி முதல் வாரத்திற்குள் வந்துவிடும்.

வாக்காளர்கள் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருந்தால் அவற்றை ஒரு இடத்தில் நீக்க மனு கொடுக்கவேண்டும். சரியான வாக்காளர் பட்டியலை வெளியிட மக்கள் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

செய்தி: ஒண் இண்டியா(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment