Saturday, January 2, 2016
கீழக்கரையில் புகாரி ஷரீப் முதலாம் ஆண்டு நிறைவு விழா!!
கீழக்கரை நடுத்தெரு ஜூம்மா பள்ளிவாசல் வளாகத்தில் புகாரி
ஷரீப் முதலாம் ஆண்டு நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கடந்த மாதம் 10 ஆம் தேதி முதல் 30- ஆம் தேதி வரை அனைத்து மசூதி மற்றும் பெண்கள் மசூதிகளிலும் 7ஆயிரத்து 275
ஹதீஸ் தொகுப்புகளை உள்ளடக்கிய புகாரி ஷரீபை தினமும்
நடைபெறும் 5
வேளை தொழுகைக்கு பிறகும் ஆலிம்களை கொண்டு பொது மக்களுக்கு
விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது. அதன் நிறைவு நாள் நிகழ்ச்சியாக வியாழக்கிழமை
நடுத்தெரு ஜூம்மா மசூதியில் சிறப்பு பேச்சாளர்களான, மேலப்பாளையம் உதுமானியா, அரபிக் கல்லூரி
பேராசிரியர் ஹாஜா முகைதீன் மற்றும் முஅஸ்கர் ரஹ்மான் மகளிர் கல்லூரி கவுரவ ஆலோசகர்
ஹபீபுர்ரஹ்மான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இவ்விழாவில், அனைத்து ஜமாத்
நிர்வாகிகளும் மசூதிகளின் ஆலிம்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கீழக்கரை புகாரி செரிப் அறக்கட்டளை, அனைத்து ஜமாத் கூட்டமைப்பு செய்திருந்தது.
செய்தி: திரு. தாஹீர், கீழக்கரை
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment