(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, February 6, 2016

எலக்ட்ரானிக்ஸ் (பெல்) நிறுவனத்தில் என்ஜினீயர் பணியிடங்கள்!!

No comments :
பெங்களூரிலுள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் (பெல்) நிறுவனத்தில் சீனியர் உதவி என்ஜினீயர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. தகுதியும்திறமையும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 27-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம். மொத்தம் 30 பணியிடங்கள் காலியாகவுள்ளன.இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ படித்திருக்கவேண்டும். மேலும் வயது 45-க்கு மிகாமல் இருக்கவேண்டும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் சீனியர் உதவி என்ஜினீயர்கள் தேர்வு செய்யப்படுவர். தகுதியுள்ளவர் விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் இணைந்து தபால் மூலம் அனுப்பவேண்டும். 

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினருக்கு கட்டணம் இல்லை. 

கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு http://www.bel-india.com என்ற இணையதளத்தைக் காணலாம்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment