(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, February 24, 2016

கீழக்கரை நகராட்சியில் கழிப்பறை கட்டுமானம் சம்பந்தமாக சமாதானக் கூட்டம்!!

No comments :
கீழக்கரை நகராட்சியில் சமாதானக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

 கூட்டத்துக்கு, வட்டாட்சியர் கமல்பாய் தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவி ராவியத்துல் கதரியா, துணைத் தலைவர் ஹாஜா முகைதீன், ஆணையர் மருது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கீழக்கரையில் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான மயானக்கரை மற்றும் பெத்ரி தெரு குப்பை கிடங்கு ஆகிய இரு இடங்களிலும் பொது கழிவறைகள் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு ஆயத்த பணிகள் நடைபெற்றன. இதற்கு அப்பகுதி பொதுமக்கள், கவுன்சிலர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து, கீழக்கரை நகராட்சியில் செவ்வாய்க்கிழமை சமுதாய தலைவர்கள் பங்கேற்ற சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பல இடங்களில் ஏற்கெனவே கட்டப்பட்ட கழிவறைகள்  பராமரிப்பின்றி மூடப்பட்டு கிடப்பதால் அந்த கழிவறைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் படியும், தற்போது தேர்வு செய்த இடங்களில் சிறுவர் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானங்கள் கட்ட முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இது குறித்து நகராட்சி ஆணையர் மருது கூறியதாவது:

இக்கூட்டத்தில் கூறிய கருத்துக்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.


செய்தி: தினமணி
பட உதவி: திரு தாஹிர், கீழக்கரை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment