(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, March 2, 2016

ஏர்வாடி பகுதியில் ரூ. 2 கோடியில் கட்டப்பட்ட மனநலக் காப்பகத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே ஏர்வாடி பகுதியில் ரூ. 2 கோடியில் கட்டப்பட்ட மனநலக் காப்பகத்தை செவ்வாய்க்கிழமை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.

திறப்பு விழாவை அடுத்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.


விழாவில், கீழக்கரை வட்டாட்சியர் கமலாபாய், கடலாடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மூக்கையா, மாவட்ட மனநல திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பெரியார் லெனின், ஏர்வாடி ஹக்தார் நிர்வாக சபையினர், ஊராட்சி செயலர் அஜ்மல்கான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment