(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, March 1, 2016

ராமநாதபுரம் மாவட்டத்தில் 78 மையங்களில் 16259 பேர் VAO தேர்வு எழுதினர்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் 78 மையங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கான எழுத்துத் தேர்வினை 16259 பேர் எழுதினார்கள்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் இத்தேர்வினை எழுத 20716 பேர் விண்ணப்பித்திருந்ததில் 4457 பேர் வராததால் 16259 பேர் மட்டுமே எழுதினர். தேர்வு ராமநாதபுரம் மாவட்டத்தில் 66 இடங்களில் 78 மையங்களில் நடைபெற்றது. தேர்வினை கண்காணிப்பதற்காக 7 பறக்கும் படைகளும், 15 நடமாடும் படைகளும் ஈடுபட்டிருந்தன.
ராமநாதபுரத்தில் தேர்வு நடைபெற்ற மையங்களில் சிலவற்றை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் எம்.சேதுராமனும், செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, புனித அந்திரேயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களை மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜனும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளி தேர்வு மையம் பதற்றமான மையமாக அறிவிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment