வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே! நன்றென்று கொட்டு முரசே! இந்த நானில மாந்தருக் கெல்லாம்.

Monday, March 14, 2016

ராமநாதபுரத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்தவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!!

No comments :
ராமநாதபுரத்தில் வீடு புகுந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகை, மடிக்கணினி உள்ளிட்டவற்றை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஆதம்நாதசாமிநகர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி மாலாதேவி (38). இவர்,வியாழக்கிழமை தனது உறவினரின் வீட்டுக்கு சென்றிருந்தார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை அவர் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். 


இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த 10 பவுன் தங்கச் சங்கிலி,மடிக்கணினி, வெள்ளி குத்துவிளக்கு திருடுபோயிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3லட்சம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் கேணிக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி: தினமணி


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment