வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!

Monday, March 21, 2016

கீழக்கரை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி!!

No comments :
கீழக்கரை அருகே கும்பிடுமதுரை சின்னபாளையரேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது மகள் சுமதி. பி.காம்., பட்டதாரி. இவருக்கு சுகாதாரத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி கீழக்கரை அ.தி.மு.க., நகர் செயலாளர் ராஜேந்திரன் ரூ.5 லட்சம் கேட்டார். இதில் ரூ.1.50 லட்சத்தை 9 மாதங்களுக்கு முன் சரஸ்வதியிடமிருந்து முன் பணமாக பெற்றுக்கொண்டார்.

ஆனால் வேலை வாங்கித் தராமலும், பணத்தை திரும்ப கொடுக்காமலும் ஏமாற்றி வருகிறார். மேலும் தன்னை தவறான வார்த்தைகளால் திட்டுவதாக எஸ்.பி., அலுவலகத்தில் சரஸ்வதி புகார் கொடுத்தார்.

இது குறித்து விசாரிக்க கீழக்கரை டி.எஸ்.பி., மகேஸ்வரிக்கு மணி வண்ணன் எஸ்.பி., அறிவுறுத்தினார்.


ராஜேந்திரன் கூறுகையில்," சரஸ்வதியின் உறவினர் ரகுமானிடம் கடந்த 2 மாதங்களுக்கு முன் ரூ.1.50 லட்சம் வாங்கினேன். இதை 10 நாட்களுக்கு முன் திரும்ப பெற்றுக்கொண்டதாக ரகுமான் உறுதிமொழி ஆவணம் எழுதி கொடுத்துள்ளார். அரசியல் விரோதத்தில் சரஸ்வதி மூலம் என் மீது கொடுத்துள்ளனர்,' என்றார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment