(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, March 21, 2016

ராமநாதபுரத்தில் அரசு மருத்துவமனை சாலையை சீரமைக்க கோரிக்கை!!

No comments :


ராமநாதபுரத்தில் அரசு மருத்துவமனை சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இச்சாலைப் பகுதியில் 3 தனியார் திருமண மண்டபங்கள், ஒரு கூட்ட அரங்கம், 5-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள், உணவகங்கள், பேக்கரிகள், வணிக வளாகங்கள் உள்ளன. மேலும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, நகர் காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், வேளாண்மைத் துறை அலுவலகங்கள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் ஆட்சியரின் முகாம் அலுவலகம் என அரசு அலுவலகங்களும் இப்பகுதியில் இருப்பதால் எந்நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். தற்போது இச்சாலை அகலம் குறைந்து குறுகிய சாலையாக இருப்பதுடன் குண்டும், குழியுமாகவும் காணப்படுகிறது.



கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழையின் போது இச்சாலையில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர். இந்த மழைநீரால் சாலைகள் அரிக்கப்பட்டு பெரும் பள்ளங்கள் உருவாகி விட்டன.

மழைக் காலம் முடிந்தும், இச்சாலை சீரமைக்கப்படாமலேயே இருந்து வருகிறது. எனவே நகரின் பிரதான சாலையாக உள்ள இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஜவுளி ரெடிமேட் வர்த்தக சங்கத் தலைவர் வைகிங்.எம்.எஸ்.கருணாநிதி கூறியதாவது: இச்சாலை கடந்த 6 மாதங்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. சாலைகளில் பெரிய அளவில் பள்ளங்கள் காணப்படுகின்றன.

குண்டும், குழியுமாக உள்ள இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். தேர்தல் என்பதால் சாலையை தாற்காலிகமாக சீரமைக்க வேண்டியது அவசியம் என்றார்.

செய்தி: தினமணி



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment