(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, April 30, 2016

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவதற்கு 31 பேர் பேர் வேட்பு மனு தாக்கல்!!

No comments :
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவதற்கு, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 31 பேர் பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22 ஆம் தேதி தொடங்கி, 29 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

கடந்த 27 ஆம் தேதி, திமுக கூட்டணியிலுள்ள மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளரான எம்.ஹெச். ஜவாஹிருல்லா, தேமுதிக வேட்பாளரான சிங்கை. ஜின்னா, பாமக வேட்பாளரான அப்துல் லத்தீப், எழுச்சி தமிழர்கள் முன்னேற்றக் கழக வேட்பாளரான மு. வீரராகவன் ஆகியோர் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

அதன்பின்னர், 28 இல் அதிமுக சார்பில் டாக்டர் முரு. மணிகண்டன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ராமலிங்கம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தாமஸ்  ஜெரோன்குமார், அகில இந்திய பார்வார்டு பிளாக் சார்பில் சிந்துபாண்டியன், மற்றும் சுயேச்சைகள் என வெள்ளிக்கிழமை மட்டும் 14 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 


ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவதற்கு, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் 11 பேர் உள்பட மொத்தம் 31 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் சில அரசியல் கட்சி வேட்பாளர்கள் கூடுதலாக 2 அல்லது 3 வேட்பு மனு தாக்கலும்,
மாற்று வேட்பாளர்களாக சிலரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்று சனிக்கிழமை, வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறவுள்ளது. இதன் பிறகே, இறுதி வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் குறித்து அறிவிக்கப்படும்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment