(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, April 7, 2016

திமுக கூட்டணியிலிருந்து எஸ்டிபிஐ கட்சி விலகல்!!

No comments :
திமுக கூட்டணியிலிருந்து எஸ்டிபிஐ கட்சி விலகுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று தெகலான் பாகவி சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''எஸ்டிபிஐ கட்சி சார்பில் திமுகவிடம் 12 தொகுதிகளின் பட்டியல் அளித்திருந்தோம். ஆனால், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடத்தவில்லை.எங்களுக்கான முக்கியத்துவத்தை திமுக தரப்பில் தராததால் திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறோம்.

நாளை (வெள்ளிக்கிழமை) செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அக் கூட்டத்தில் யாருடன் கூட்டணி என்று கலந்து ஆலோசிக்கப்படும். அதற்குப் பிறகு எங்களின் நிலைப்பட்டை அறிவிப்போம்'' என்றார் தெகலான் பாகவி.


முன்னதாக, ஒரேயொரு தொகுதி மட்டுமே தரமுடியும் என திமுக பொருளாளர் ஸ்டாலின் உறுதியாக கூறியதால் எஸ்டிபிஐ கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment