(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, June 16, 2016

ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி!!

No comments :

ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில், பெருங்குளம் வட்டாரத்துக்கு உள்பட்ட 8 கிராமங்களின் கணக்குகளை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் உ. மகேஷ்வரன் தணிக்கை செய்தார்.

இந்நிகழ்ச்சியில், குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு வட்டாட்சியர் ராமர், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் கலைமதி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பழனிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  வருவாய் தீர்வாயக் கணக்குகள் ஆய்வின்போது, குயவன்குடி, தேர்போகி, வாலாந்தரவை, கும்பரம், காரான், இரட்டையூரணி, அழகன்குளம் உள்ளிட்ட பெருங்குளம் உள்வட்டாரத்துக்கு உள்பட்ட கிராமங்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன.இதில், முதியோர் உதவித்தொகை கோரி இரு மனுக்களும், வீட்டு மனைப்பட்டா மாறுதல் கோரி இரு மனுக்களும் என மொத்தம் 7 மனுக்கள் பெறப்பட்டன.

இம்மாதம் 16 ஆம் தேதி ராமநாதபுரம் வட்டாரத்துக்கு உள்பட்ட கிராமங்கள், 17 ஆம் தேதி மண்டபம் வட்டாரத்துக்கு உள்பட்ட கிராமங்களின் கணக்குகளும், 21 ஆம் தேதி தேவிபட்டினம் வட்டாரத்துக்கு உள்பட்ட கிராமங்களின் கணக்குகளும் தணிக்கை செய்யப்பட இருப்பதாகவும், அந்தந்தப் பகுதி மக்கள் தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறும் வட்டாட்சியர் மாரி தெரிவித்தார்.

செய்தி: தினசரிகள்(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment