(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, June 9, 2016

ராமநாதபுரத்தில் ஜூன் 14 ஆம் தேதி இலவச பால் காளான் வளர்ப்பு பயிற்சி!!

No comments :
ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஜூன் 14 ஆம் தேதி இலவச பால் காளான் வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட இருப்பதாக அதன் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜசேகரன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் பால்க்காளான் நன்கு வளர சாதகமான சூழல் நிலவுகிறது.

எனவே விவசாயிகள் தங்கள் பண்ணைகளில் இருந்து கிடைக்கும் வைக்கோல் மற்றும் தாவரக் கழிவுகளை இப்பால்க்காளான் வளர்க்க உபயோகப்படுத்தி நிலையான வருமானம் பெறலாம்.



இதற்கான இலவசப் பயிற்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஜூன் 14 ஆம் தேதி நடைபெறுகிறது.

இப்பயிற்சியில் விருப்பமுள்ள விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள், தொழில் முனைவோர் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு
திட்ட ஒருங்கிணைப்பாளர்,
வேளாண்மை அறிவியல் நிலையம்,
கடலோர உவர் ஆராய்ச்சி மையம்,
ராமநாதபுரம்,
தொலைபேசி எண்-04567-230250 மற்றும் 04567-232639 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி: தினசரிகள்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment