(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, June 12, 2016

ஜூன் 15-ம் தேதி கீழக்கரையில் ஜமாபந்தி!!

No comments :

கீழக்கரை வட்டாட்சியர் எல்கைக்கு உள்பட்ட 26 கிராமங்களின் வருவாய்த் தீர்வாய கணக்குகளின் தணிக்கை, (ஜமாபந்தி) ஜூன் 15இல் தொடங்க இருப்பதாக வட்டாட்சியர் தர்மர் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கீழக்கரை வட்டாரத்தில் 26 வருவாய் கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்கள் தொடர்பான வருவாய்த் தீர்வாய கணக்குகள் ராமநாதபுரம் தனித்துணை ஆட்சியர்(சிறப்புத் திட்ட அமலாக்கம்) அவர்களால் ஆய்வு செய்யப்படவுள்ளது.

வரும் 15 ஆம் தேதி உத்தரகோசமங்கை, 16 ஆம் தேதி கீழக்கரை, 17 ஆம் தேதி திருப்புல்லாணி பகுதிகளின் கணக்குகள் ஆய்வு செய்யப்படுகின்றன. இத்தேதிகளில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறைகளையும் தெரிவித்து பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment