Wednesday, September 21, 2016
ராமநாதபுரம் மாவட்டத்தில் 16,902 பேருக்கு விவசாய கடன்கள் தள்ளுபடி!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் 16,902 பேருக்கு விவசாய கடன்களை தள்ளுபடி செய்தமைக்கான ஆணையை தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் திங்கள்கிழமை வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்கள் தள்ளுபடி வழங்கப்பட்டதற்கான ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். மக்களவை உறுப்பினர் அன்வர்ராஜா,சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.முத்தையா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மு.சுந்தரபாண்டியன்,பரமக்குடி நகர்மன்ற உறுப்பினர் எம்.ஏ.முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில்,
தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் டாக்டர். எம். மணிகண்டன் கலந்து கொண்டு சிறு,குறு விவசாயிகள் 16,902 பேருக்கு ரூ.45,75,38,316 மதிப்பிலான விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆணைகளை வழங்கினார்.
விழாவில்,
மாவட்ட வருவாய் அதிகாரி மு.அலிஅக்பர், முன்னாள் எம்.எல்.ஏ.முருகன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
\முன்னதாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஜெகஜோதி வரவேற்றார். கூட்டுறவுச் சங்க இணைப் பதிவாளர் செந்தமிழ்செல்வி நன்றி கூறினார்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment