(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, September 21, 2016

ராமநாதபுரத்தில் இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியீடு!!

No comments :
ராமநாதபுரத்தில் இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் வெளியிட்டார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3,910 பேர் உள்ளாட்சிப் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்படவுள்ளனர். இது தொடர்பான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் வெளியிட்டு பேசியது:

ராமநாதபுரம் நகராட்சியில் மட்டும் 96,145 ஆண் வாக்காளர்களும்,96,800 பெண் வாக்காளர்களும், 32 மூன்றாம் பாலின வாக்காளர்களுமாக சேர்த்து மொத்தம் 1,92,977 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களைத் தவிர மற்ற நகராட்சிகள்,ஊராட்சிகள்,பேரூராட்சிகள் உள்ளிட்டவற்றையும் சேர்த்து மொத்தம் 11,00,202 வாக்காளர்கள் உள்ளனர். அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. 

இப்பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது மறுப்புரைகள் இருந்தாலோ வேட்பு மனு தாக்கல் செய்ய குறிப்பிடப்படும் இறுதிநாள் வரை சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அதிகாரிகளிடம் நேரில் சென்று பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களையும் செய்து கொள்ளலாம் என்றார்.


நிகழ்ச்சியில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(உள்ளாட்சித் தேர்தல்).செல்லத்துரை, வளர்ச்சித் துறை தேர்தல் அதிகாரி திருநாவுக்கரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment