(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, September 24, 2016

கீழக்கரையில் மாதக்கணக்கில் தார் ஊற்றாமல் கிடப்பில் போடப்பட்ட சாலைகள்!!

No comments :
கீழக்கரையில் மாதக்கணக்கில் தார் ஊற்றாமல் கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகளால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். 

கீழக்கரையில் கடந்த 2 மாதங்களாக ரூ.5 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகள் பல தெருக்களில் நடந்து வருகிறது.


இந்த சாலைகளை விதிமுறைகளுக்கு முரணாக பெயரளவில் இயந்திரம் மூலம் தோண்டிவிட்டு மணல் கலந்த ஜல்லிகற்களை உடைக்கப்பட்ட ரோட்டின் மேல் பரப்பிவிட்டு ரோடு போடும் உருளை மெஷினை வைத்து அழுத்தம் செய்துவிட்டு மாதக்கணக்கில் தார் ஊற்றாமல் கிடப்பில் போட்டுள்ளனர்.








இதனால் வடக்குத்தெரு, தெற்குத்தெரு, அன்புநகர் உள்ளிட்ட பல ரோடுகளில் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இச்சாலையில் கற்கள் சிதறி கிடப்பதால் வாகனங்களின் டயர்கள் பஞ்சராகியும், இலகுவான டயர்கள் வெடித்தும் வருகிறது.

மேலும் இச்சாலையில் வாகனங்கள் தடுமாற்றத்துடன் செல்வதால் தூசிகள் பறந்து மாசு அடைந்து இச்சாலையில் செல்வோர்க்கு ஒவ்வாமை நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பிற்கு முன் மாதக்கணக்கில் கிடப்பில் போடப்பட்ட சாலைகளுக்கு தார்களை ஊற்றி முழுமையாக பணிகளை முடிக்குமாறு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment