(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, November 14, 2016

ராமநாதபுரம் ரோமன் சர்ச் அருகே விபத்து, ஒருவர் இறப்பு!!

No comments :
ராமநாதபுரம் கொத்த தெருவைச் சேர்ந்த சேகர் மகன் மருந்தாளுநர் வெங்கடேச பெருமாள்(25). இவரும் இவரது நண்பர்  ராமநாதபுரம் எஸ்.எம்.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் மகன் சரவணனும்(27)பைக்கில் சென்றனர். 

ராமநாதபுரம் ரோமன் சர்ச் பேருந்து நிறுத்த வளைவில் வந்தபோது, ராமேசுவரத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்ற சுற்றுலாப் பேருந்து  இவர்கள் மீது மோதியது. இதில்  இருவரும் பலத்த காயம் அடைந்தனர். 

ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர்களில், தனியார் மருந்துக்கடையில் பணிபுரியும் வெங்கடேசப்பெருமாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment