Saturday, December 10, 2016
பரமக்குடியில் நாளை (டிச.11) மெகா இலவச மருத்துவ முகாம்!!
பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்
பள்ளியில் ஜெம் மருத்துவமனை சார்பில், தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்
திட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை
(டிச.11) மெகா இலவச மருத்துவ
முகாம் நடைபெற உள்ளது.
கோயம்புத்தூர் ஜெம் மருத்துவமனை மற்றும்
ஆராய்ச்சி மையமானது, ஆயிர வைசிய
மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆயிர வைசிய சமூகநலச் சங்கம் சார்பில், வயிற்றுக் கோளாறு, உடல் பருமன், கல்லீரல், கணையம், கர்ப்பப் பை கோளாறு, சினைப்பை கட்டிகள், புற்று நோய் மற்றும் குடல் சம்பந்தப்பட்ட அனைத்து
நோய்களுக்கும் இலவச மருத்துவ முகாமை நடத்துகிறது.
இம்முகாம், ஜெம் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சி. பழனிவேலு
தலைமையிலும், உடல் பருமன் மற்றும்
சர்க்கரை நோய் துறையின் தலைவர் மருத்துவர் பி. பிரவீண்ராஜ் முன்னிலையிலும், ஞாயிற்றுக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது. தேவைப்படும்பட்சத்தில், எண்டோஸ்கோபி, ஸ்கேன், ரத்தப் பரிசோதனை உள்ளிட்டவையும் இலவசமாக செய்யப்படும்.
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு அட்டை
வைத்திருப்போர் காப்பீட்டு அட்டை கொண்டு வரவேண்டும். பொதுமக்கள் இந்த அரிய
வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என, முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு, ஜெம் மருத்துவமனை அறக்கட்டளை 04222325100,
90039-32323. ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி 94431-23190,
ஆயிர வைசிய சமூகநலச் சங்கம் 94431-29870
ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment