Friday, January 6, 2017
ஜன.11 ராமநாதபுரத்தில் உள்ளூர் விடுமுறை!!
ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கை கோயிலில் ஜனவரி 11 ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவதை முன்னிட்டு, அன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, ஆட்சியர் எஸ். நடராஜன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, ஜனவரி 28 ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் இம்மாதம் 28 ஆம் தேதி வழக்கம்போல் செயல்படும்.
ஆருத்ரா தரிசன நாளான ஜனவரி 11 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், ராமநாதபுரம்
மாவட்டத்தில் உள்ள கரூவூலம், சார்-நிலைக் கருவூலங்கள் மற்றும்
அனைத்து அரசு அலுவலகங்கள் ஆகியன மட்டும் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு
குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் எனவும், ஆட்சியரின்
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment