(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, April 11, 2017

ராமநாதபுரம் அருகே மாடக்கொட்டான் ஊராட்சியில் 5 நாட்களாக நீடிக்கும் மின் தடை!!

No comments :
ராமநாதபுரம் யூனியன் மாடக்கொட்டான் ஊராட்சியில் மேலக்கோட்டை, ரமலான் நகர், இளமனூர், சாலை குடியிருப்பு, மாயாபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. மேலக்கோட்டை மற்றும் ரமலான் நகரில் மட்டும் சுமார் 1200–க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த வீடுகள் அனைத்திற்கும் ஒரே ஒரு டிரான்ஸ்பார்மரில் இருந்தே மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.

இதனால் அதிக மின் பளு காரணமாக இந்த டிரான்ஸ்பார்மர் அடிக்கடி பழுதாகி மின்தடை ஏற்படுகிறது. மேலும், இந்த பகுதியில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின்சாதன பொருட்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக இந்த பகுதியில் தொடர்ந்து மின்தடை நீடித்து வருகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் கிரைண்டர், மிக்சி, மின் விசிறி உள்ளிட்ட மின் சாதனங்களை இயக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
.
தற்போது கடந்த 5 நாட்களாக மின்சாரம் இல்லை. கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் மின்விசிறி கூட இயக்க முடியாத நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும், மின்வாரிய உயர் அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு கூடுதலாக டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கவும், சீரான மின் வினியோகம் செய்து பொதுமக்களின் துயர் துடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும்.(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment