(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, April 11, 2017

பரமக்குடி நகரில் தேங்கும் குப்பைகளை கொண்டு மின்சாரம் தயாரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை!!

No comments :
பரமக்குடி நகரில் தினமும் தேங்கும் காய்கறி, உணவு கழிவு குப்பைகளை கொண்டு மின்சாரம் மற்றும் கியாஸ் தயாரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி நகராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தையில் ரூ.30 லட்சம் மதிப்பில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளன. 

இதை சேலத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒரு வருடத்திற்கு அதன் உற்பத்தியை மேற்கொள்ள செய்து, பின்பு நகராட்சி நிர்வாகத்திடம் பணிகளை ஒப்படைக்கின்றனர்.அதில் இருந்து கிடைக்கும் கியாசை பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்திற்கும், மின் உற்பத்தியை அந்த பகுதியில் உள்ள தெரு மின் விளக்குகளுக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிவடைந்து தயார் நிலையில் இருப்பதால் இந்த மாதம் இறுதிக்குள் இந்த திட்டம் தொடங்கப்பட்டு கியாஸ் மற்றும் மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் நாராயணன், சுகாதார அலுவலர் சீனிவாசன் ஆகியோர் கூறியதாவது:

நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்கனவே குப்பையில் இருந்து உரம் தயாரிக்கப்பட்டு நல்ல முறையில் இயங்குகிறது. அதன் மூலம் விவசாயிகளும், பொதுமக்களும் அதிக அளவில் பயன் பெற்று வருகின்றனர்.

தற்போது உணவு, காய்கறி கழிவு குப்பைகளை எந்திரத்தில் அரைத்து அதில் இருந்து கியாஸ், மற்றும் மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டது. இந்த மாதம் இறுதியில் மின்சாரம், கியாஸ் உற்பத்தி பணிகள் தொடங்கும். இதன் மூலம் நகராட்சிக்கு அதிக அளவிலான பொருளாதாரம் மிச்சமாகும்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment