(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, April 20, 2017

ராமநாதபுரம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க எதிர்த்து மறியல், 95 பேர் கைது!!

No comments :
ராமநாதபுரம் அருகே உள்ளயி கூரியூர் கிராமம். இந்த ஊரின் அருகில் உள்ள ரெயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்கு கூரியூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், மக்களின் எதிர்ப்பை மீறி ரெயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை மும்முரமாக நடத்தி வருகிறது. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற உள்ள நிலையில் நேற்று முன்தினம் ரேசன்கார்டுகளை ஒப்படைத்து கூரியூர் கிராம மக்கள் ஊரை விட்டுவெளியேற முடிவு செய்துள்ளதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்தநிலையில் ரெயில்வே நிர்வாகத்தின் சார்பில் சுரங்கப்பாதைக்கான கான்கிரீட் கர்டர்கள் பொருத்தும் முக்கிய பணிகள் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையறிந்த கிராம மக்கள் தங்களின் உணர்வுகளை மதிக்காமல் ரெயில்வே நிர்வாகம் செயல்படுவதாக கூறி சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ரெயில்வே தண்டவாள பகுதியில் நின்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று காலை ராமேசுவரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற ரெயில், கூரியூர் பகுதியில் வந்தபோது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் ரெயிலை மறித்தனர். அப்போது தண்டவாள பகுதியில் ஏராளமான ஆண்களும், பெண்களும் நிற்பதை கண்ட ரெயில் ஓட்டுனர் சமயோசிதமாக ரெயிலை சிறிது தூரத்திற்கு முன்பு நிறுத்தினார். 

தகவலறிந்து வந்த போலீசார் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர். அதைத்தொடர்ந்து ரெயில் புறப்பட்டு சென்றது. தொடர்ந்து தங்களின் கோரிக்கையை வலியுறுத்தியபடி கிராம மக்கள் அந்த பகுதியில் கோ‌ஷமிட்டபடி நின்றிருந்தனர். இதனால் போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர்.

அப்போது கைதாக தயாராக இருப்பதாக கூறிய கிராம மக்கள் நடைபயணமாக போலீஸ் நிலையத்திற்கு வருவதாக தெரிவித்தனர். அதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்ததால், கிராமம மக்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் நடந்துதான் வருவோம் என்று கிராம மக்கள் கூறி நடந்து செல்ல முயன்றதால் அவர்களை சுற்றி வளைத்து போலீசார் 59 பெண்கள் உள்பட 95 பேரை கைது செய்தனர்.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment