Tuesday, April 18, 2017
தபால் சேவகர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!!
மத்திய தபால் துறை, தமிழக தபால் வட்டத்தில்
கிராம தபால் சேவகர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது.
மொத்தம் 128 பேர் தேர்வு
செய்யப்படுகிறார்கள்.
இட ஒதுக்கீடு அடிப்படையில்
இட ஒதுக்கீடு அடிப்படையில்
பொதுப் பிரிவுக்கு 71 இடங்களும்,
ஓ.பி.சி. பிரிவினருக்கு 39 இடங்களும்,
எஸ்.சி. பிரிவினருக்கு 18 இடங்களும் உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 40 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி:
10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
மெரிட் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்:
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
9–5–2017–ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும்.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://indiapost.gov.in, https://appost.in/gdsonline என்ற இணையதள பக்கங்களை பார்க்கலாம்.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://indiapost.gov.in, https://appost.in/gdsonline என்ற இணையதள பக்கங்களை பார்க்கலாம்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment