(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, November 8, 2017

ராமநாதபுரதில் தடை செய்யப்பட்ட 200 கிலோ பாலிதீன் பொருட்கள் பறிமுதல்!!

No comments :
ராமநாதபுரம் நகராட்சிப்பகுதியில் பாலிதீன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி கடைகளில் விற்பனை, பயன்பாட்டிற்கு வைத்திருந்தவர்களிடம் இருந்து 200 கிலோ பாலிதீன் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரத்தில் நவ., 15 முதல் பாலிதீன் பொருட்கள் விற்பனை, பயன்பாட்டினை நிறுத்தாவிட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுத்தரப்படும், என நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதனை பொருட்படுத்தாது, தொடர்ந்து பாலிதீன் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.



இந்நிலையில் நகராட்சி சுகாதார அலுவலர் இளங்கோவன், ஆய்வாளர்கள் ஹரிதாஸ், மதன்குமார், ஜெகதீஸ் ஆகியோர் ராமநாதபுரம், சாலை தெரு, காய்கறி மார்க்கெட் பகுதியில் ஆய்வு நடத்தினர். இதில் 28 கடைகளில் இருந்து 200 கிலோ பாலிதீன் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து பாலிதீன் பொருட்கள் விற்பனை செய்தால், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும், என அறிவுறுத்தியுள்ளனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment