(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, December 4, 2017

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் கலெக்டர் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் பணிகளை பார்வையிட்டார்!!

No comments :
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அரசு மனநல மையத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் முனைவர் நடராஜன் இனிப்பு வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி அரசு மனநல மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு
  உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கலெக்டர் முனைவர் ச.நடராஜன் நேரடியாக சென்று, சிகிச்சை மற்றும் மனநல பயிற்சி பெற்று வரும் நபர்களுக்கு இனிப்புகளை வழங்கி, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கிராமிய சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தொழிற்பயிற்சி வழங்கும் பணிகளை பார்வையிட்டார். 

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி அரசு மனநல மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பலர் இம்மருத்துவமனைக்கு வருகை தந்து மனநல தொடர்பான சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர். 

இம்மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கிராமிய சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தொழிற்பயிற்சி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.குறிப்பாக, வயர் கூடை பின்னுதல், ஊதுபத்தி தயாரித்தல், மரம் மற்றும் கடல் சங்கு ஆகியவற்றால் ஆன சிறிய வகை வீட்டு அலங்காரப் பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு சிறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகிறது. 

இந்நிலையில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாவட்ட கலெக்டர் முனைவர் ச.நடராஜன் ஏர்வாடி அரசு மனநல மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு நேரடியாக வருகை தந்து மனநல சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து சிகிச்சை பெறும் நபர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கிராமிய சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொழிற்பயிற்சிகளையும் பார்வையிட்டதோடு, அவர்கள் தயாரித்த அலங்கார பொருட்களையும் பார்வையிட்டார்.

மேலும், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நபர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உறுதி செய்வதோடு அவர்களிடத்தில் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என மருத்துவர்களிடத்தில் அறிவுருத்தினார். அதே நேரத்தில் இது போன்ற தொழிற்பயிற்சிகளை தொடர்ந்து வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அலுவலர்களிடத்தில் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது ஏர்வாடி அரசு மனநல மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மைய பணியாளர்கள் உடனிருந்தனர்.

செய்தி: தினபூமி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment