(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, February 28, 2018

நாளை தொடங்குகிறது பிளஸ் 2 தேர்வுகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் 15,862 மாணவர்கள் எழுதுகின்றனர்!!

No comments :
பிளஸ் 2 தேர்வு நாளை தொடங்க உள்ள நிலையில் தேர்வு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பள்ளி கல்வித்துறையின் மூலம் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நாளை (மார்ச் 1) பிளஸ் 2 தேர்வு தொடங்க உள்ளது.ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 54 தேர்வு மையங்களும், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி, தடையில்லா மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேடுகளை தடுக்க முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் 86 நபர்கள் கொண்ட கண்காணிப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட உள்ளது. தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு விடைத்தாள் சேகரிப்பு மையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


நாளை தொடங்கும் பொதுதேர்வு வரும் ஏப்.6ம் தேதி வரை நடக்க உள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment