(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, February 6, 2018

ராமேஸ்வரம் கோயிலில் பூட்டை உடைத்து திருட்டு!!

No comments :

ராமேஸ்வரம் மாரியம்மன் கோயிலில் பூட்டை உடைத்து அம்மனின் தாலிச்சங்கிலி மற்றும் உண்டியல் பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமேஸ்வரம் மார்க்கெட் தெருவில் பூ மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின்  நுழைவாயில் கதவின் பூட்டை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்தனர். அம்மன் கழுத்தில் இருந்த ஒன்றரைப் பவுன் தாலிச்சங்கிலியை திருடினர்.

மேலும், அங்கிருந்த உண்டியலையும் உடைத்து அதிலிருந்த பணத்தைத் திருடி தப்பிவிட்டனர்.

அதிகாலையில் கோயில் கதவு உடைக்கப்பட்டுக் கிடந்தது குறித்து அப்பகுதி மக்கள் ராமேஸ்வரம் கோயில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

கோயிலில் நகை, பணத்தை திருடிய நபரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment