(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, May 7, 2018

வீணாகிப்போனது அரசு பணம் 60 லட்சம், அதிகாரிகள் கவனிப்பார்களா?!!

No comments :

ராமேஸ்வரத்தில் கட்டப்பட்ட கழிபபிடங்கள் மக்கள் பயன்பாடின்றி மூடி கிடப்பதால், அரசுக்கு ரூபாய் 60 லட்சம் வீணாகியது.

ராமேஸ்வரத்திற்கு தினமும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருவதால் பூங்கா, சாலை, கழிப்பறை வசதி ஏற்படுத்திட மத்திய, மாநில பல கோடி ரூபாய் ராமேஸ்வரம் நகராட்சிக்கு வழங்கியது.

ஆனால் மக்களிடம் கருத்து கேட்காமல் அவசர கதியில் சுற்றுலா டவர், கழிப்பறை கட்டடம் கட்டி அரசு நிதியை அதிகாரிகள் வீணடித்தனர்.இதில் 2014-16ல் மத்திய, மாநில அரசு வழங்கிய நிதியில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் ரூபாய் 20 லட்சத்தில் கழிப்பறை கட்டடம், நம்புநாயகி அம்மன் கோயில் அருகில், தெற்கு கரையூர், புலித்தேவர் நகர், மல்லிகை நகரில் 40 லட்சத்திற்கு( தலா 10 லட்சம்) நம்ம டாய்லெட் அமைத்தனர்.

ஆனால் இந்த கழிப்பறைகள் தண்ணீர் வசதியில்லாத பகுதியிலும், பக்தர்கள், மக்கள் பயன்படுத்த முடியாத இடத்திலும் அமைத்தனர். மேலும் கழிப்பறை பராமரிக்க ஊழியர் இன்றி மக்கள் பயன்பாடிற்கு வராமலே மூடியே கிடக்கிறது.

இதனால் அரசுக்கு ரூபாய் 60 லட்சம் வீணாகி போனதால், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மனக்குமுறலாக உள்ளது.


செய்தி: தினமலர்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment