Monday, May 7, 2018
வாடிக்கையாளர்கள் வைப்புத்தொகை கையாடல் செய்த தபால் அலுவலர் மீது வழக்கு!!
ராமநாதபுரம் வண்ணாங்குண்டு தபால் அலுவலக கிளையில்
வாலாந்தரவையை சேர்ந்த சரவணன், 2012 ல் முதல் பணியாற்றி
வந்துள்ளார். அப்பகுதியில் தொடர் வைப்பு கணக்குகளில் பல ஆசிரியர்கள் மாதாமாதம்
பணம் செலுத்தியுள்ளனர்.
இந்த தொகையினை கணக்கில் வரவு வைக்காமல், கணக்கு
வைத்திருப்பவர்கள் புத்தகத்தில் மட்டும் பதிவு செய்துள்ளார். தபால் அலுவலக
ஆய்வாளரால்,
2016 ஏப்., 22 ம் தேதி
கண்டுபிடிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்களின் பணம் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 312
ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று
தவணைகளாக 88
ஆயிரத்து 323 ரூபாயை செலுத்தியுள்ளார்.
மீதமுள்ள 43 ஆயிரத்த 989 ரூபாய்
செலுத்தவில்லை. இது குறித்து தபால் அலுவலக ஆய்வாளர் கொடுத்த புகார் படி, மாவட்ட
குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment