(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, June 21, 2018

தையல் இயந்திரம் பெற விரும்பும் பயனாளிகள் ஜூலை 31க்குள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர்!!

No comments :


ராமநாதபுரம் மாவட்ட சமூகநலத்துறையின் சார்பில் மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் பெற விரும்பும் பயனாளிகள் வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் எஸ்.நடராஜன் செவ்வாய்க்கிழமை
தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்ட சமூகநலத்துறையின் சார்பில் விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி ஏழைப் பெண்கள் மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்குவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.ரூ.72 ஆயிரத்துக்குள் வருமானச்சான்று, இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை, தையல் பயிற்சி சான்று (6மாத கால பயிற்சி), வயதுச்சான்று (20 முதல் 40 வயது வரை)கல்விச்சான்று, பிறப்புச்சான்று, சாதிச்சான்று. மனுதாரின் கலர் புகைப்படம்-2, விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர். ஆதரவற்றோர் மற்றும் - மாற்றுத்திறனாளி பெண் போன்றவர்களாக இருந்தால் அதற்கான சான்று நகல், ஆதார் அடையாள அட்டை ஆகியனவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

இந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை
மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்,
ராமநாதபுரம்

என்ற முகவரிக்கு வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment