(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, August 25, 2018

அரசு மருத்துவமனையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

No comments :


ராமநாதபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரண்மனை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா குழு நிர்வாகி என்.ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் காசிநாததுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.குருவேல், எம்.ராஜ்குமார், இ.கண்ணகி, தாலுகா செயலாளர் பி.செல்வராஜ், மாவட்டக்குழு என்.வெங்கடேஷ் பங்கேற்றனர்.மருத்துவர்கள் காலை 7:30 முதல் பகல் 1:00 மணிவரை புற நோயாளிகள் பணியில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மருத்துவர் கவனக்குறைவால் ஏற்படும் மரணங்களுக்கு சட்டப் பூர்வ நடவடிக்கை, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், இரவு பணியில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

செய்தி: தினசரிகள்(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment