(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, September 9, 2018

ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.9) முதல் அக்டோபர் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பரமக்குடியில் வரும் 11 ஆம் தேதி, இமானுவேல் சேகரன் நினைவு தினமும், பசும்பொன்னில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி தேவர் குருபூஜையும் நடைபெறவுள்ளது. எனவே, சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை கருத்தில் கொண்டு, ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 9) முதல் அக்டோபர் 30 ஆம் தேதி வரை 2 மாத காலத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



அதன்படி பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்தவோ, 5-க்கும் மேற்பட்டோர் கூடுவதற்கோ தடை விதிக்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த கட்டாயம் முன் அனுமதி பெற வேண்டும். இம்மாதம் 15 ஆம் தேதி வரையும், அக்டோபர் 25 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையும் வெளி மாவட்டங்களிலிருந்து வாடகை வாகனங்கள், சரக்கு வாகனங்கள், டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களில் நினைவிடங்களுக்கு அஞ்சலி செலுத்த வரவும் தடை விதிக்கப்படுகிறது.


அதேபோல் நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஒரு கிலோ மீட்டருக்குள் மட்டுமே மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெற்று ஜோதி எடுத்து வர வேண்டும். அஞ்சலி செலுத்த வரும் வாகனங்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment