(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, September 5, 2018

ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்று நகராட்சிகளில் கமிஷனர் இல்லை; பணிகள் தேக்கம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் மூன்று நகராட்சியில் கமிஷனர் இல்லை. ராமநாதபுரத்தில் அடுத்த நிலையில் உள்ள பொறியாளர் பணியிடமும் காலியாக இருப்பதால், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை, பரமக்குடி ஆகிய நான்கு நகராட்சிகள் உள்ளன. இதில் கீழக்கரையில் பணியாற்றிய கமிஷனர் வசந்தி ஒரு ஆண்டுக்கு முன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இன்று வரை இந்தப்பணியிடத்தில் கமிஷனர் நியமிக்கப்படவில்லை.

சில நாட்களுக்கு முன் போடப்பட்ட பதவி உயர்வில் பரமக்குடி கமிஷனர் நாராயணன் பதவி உயர்வுக்காக பழனி நகராட்சி ஆணையாளராகவும், ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி தேனி நகராட்சிக்கும் பணியிட மாறுதல் செய்து உத்தரவிடப்பட்டது.
இதில் ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் பணியிட மாறுதல் உடனடியாக ரத்து செய்யப்பட்டு ஆம்பூர் நகராட்சிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.


இதன் காரணமாக நான்கு நகராட்சிகளில் மூன்று நகராட்சிகளுக்கு கமிஷனர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது ராமேஸ்வரம் கமிஷனர் வீரமுத்துக்குமார் மட்டுமே பணியில் உள்ளார். மூன்று நகராட்சிகளில் கமிஷனர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாவட்ட தலைநகரமான ராமநாதபுரத்தில் கமிஷனருக்கு அடுத்த நிலையில் உள்ள பொறியாளர் நடராஜன் 4 மாதங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அந்தப்பணியிடத்தில் பொறியாளர் நியமிக்கப்படாத நிலை உள்ளது. இது போன்று நிர்வாகத்தை நடத்தும் அதிகாரிகள் இல்லாத நிலையில் நகராட்சிகளில் வளர்ச்சிப்பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது வாக்காளர்பட்டியல் சுருக்க திருத்தப்பட்டியல் செப்.,1 ல் வெளியிடப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. 31.10.2018 ல் வரைவு வாக்காளர் பட்டியலும்,5.1.19 ல் இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்படுகிறது. இந்த நேரத்தில் கமிஷனர்களை பணியிட மாற்றம் செய்ய முடியாது. அப்படியே அவசரம் கருதி பணியிட மாறுதல் செய்ய தேர்தல் கமிஷன் ஒப்புதல் பெற்றே மாற்ற முடியும். இனி கமிஷனர்கள் பணி நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பதவி உயர்வு பெற்றவர்களை ஆக., 31ல் பணியில் சேர அறிவுறுத்தப்பட்டதால், அந்த நாளில் அனைவரும் பணியில் சேர்ந்துவிட்டனர்.
பாதிக்கப்படுவது பொதுமக்களே, ஆக, அதிவிரைவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் பொதுமக்கள்.


நன்றி: திரு. தாஹீர், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment