Wednesday, September 5, 2018
8ம் வகுப்பு 10ம் வகுப்பு படித்தவர்கள் அரசு கோட்டாவில் ஐ.டி.ஐ -ல் சேர செப்-12க்குள் விண்ணப்பிக்கலாம்!!
அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.,களில்
50 சதவீதம் அரசு ஒதுக்கீட்டிற்கான மூன்றாம் கட்ட கலந்தாய்விற்கு செப்.,12 வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம், என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
பரமக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்
எஸ்.ரமேஷ்குமார் கூறியிருப்பது:
மாவட்டத்தில் அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், உதவி
பெறும் மற்றும் தனியார் சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்களால் ஒப்படைப்பு
செய்யப்படும் 50
சதவீதம் அரசு இட ஒதுக்கீட்டிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு
நிறைவு பெற்றுள்ளது. மீதம் உள்ள காலியிடங்கள் மற்றும் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்துார்
ஆகிய மூன்று இடங்களில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தற்போது அங்கீகாரம்
பெறப்பட்டுள்ள தொழிற்பிரிவுகளுக்கும் சேர்த்து மூன்றாம் கட்ட கலந்தாய்வுக்காக
விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை இணையதளத்தில்(ஆன்லைன்) செப்.,12 வரை பதிவு செய்யலாம்.
பரமக்குடி, ராமநாதபுரம் அரசு ஐ.டி.ஐ.,களில்
எலக்ட்ரீசியன் தொழிற்பிரிவிலும்,
முதுகுளத்துார் அரசு ஐ.டி.ஐ.,யில் கம்மியர்
மோட்டார் வண்டி தொழிற்பிரிவிலும் சேரலாம்,
எட்டாம் வகுப்பு தகுதியில் இன்ஜினியரிங் (பொது) 2 இடங்கள், எட்டாம்
வகுப்பு இன்ஜினியரிங் அல்லாத பிரிவில் 46 இடங்கள்,
பத்தாம் வகுப்பு தகுதியில் இன்ஜினியரிங்(பொது) 74 இடங்கள்,
பத்தாம் வகுப்பு இன்ஜினியரிங் அல்லாத பிரிவில் 36 இடங்கள் உள்ளன.
இவ்வாறு கூறியுள்ளார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment