(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, October 4, 2018

ராமநாதபுரம் அருகே ECR சாலையில் விபத்து!!

No comments :
கீழக்கரை அருகே நேற்று காலை கன்டெய்னர் லாரி-அரசு பஸ் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பெண் ஒருவர் பலியானார். மாணவி உள்பட 18 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று அதிகாலை 59 பயணிகளுடன் தென்காசி நோக்கி அரசு பஸ் புறப்பட்டு சென்றது. திருப்புல்லாணி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வரும்போதுதூத்துக்குடியிலிருந்து உப்பூர் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரியும்-அரசு பஸ்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி கொண்டன. இந்த விபத்தில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. இதில், பெண் பயணி ஒருவர் பலியானார். மேலும் பவித்ரா(17), முனிஸ்வரி (16), பிரியதர்ஷினி(13), மகேஸ்வரி (16) உள்பட உள்பட 18 பேர் படுகாயமடைந்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் பஸ்சின் இடிபாடுகளில் சிக்கிய மாணவியை உள்பட பயணிகளை மீட்டனர். படுகாயமடைந்தவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தால் 2மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment